உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நாளை(21) நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியின் கீழ் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பிலும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

wpengine

பதில் பிரதம நீதியரசராக புவனெக அலுவிகார பதவிப்பிரமாணம்

wpengine

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்

wpengine