உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சஜின்வாஸிற்கு மஹிந்த தூது; உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சஜின் கூறுகிறார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –முன்னாள் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தென்மாகாண மந்திரியொருவர் எனது மனைவியை தொலைபேசியில் அழைத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ என்னைக் கொலை செய்வதாகவும், இரண்டு பிளளைகளையும் பாதுகாத்துக் கொள்ளுமாறும் மஹிந்த கூறிதாக, எனது மனைவிக்கு அவர் கூறியுள்ளார்.” என்று சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸ தரப்பினரின் குறித்த ஆதரங்களை அழமாக யோசித்தே வெ ளியிடத் தீர்மானித்தேன். என்னை கொலை செய்தாலும் பரவாயில்லை. தற்போது தனது பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் விடுகின்றனர். ராஜபக்ஸ தரப்பினரின் அரசியல் இதுவா” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

இந்தக் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாரிடம் ஆதரத்துடம் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

ஊடகவியளர் சந்திப்பின் போது உயிர் அச்சுறுத்தல் விடுத்து தொலைபேசி உரையாடல் பதிவு செய்த இருவெட்டை ஊடகவியலாளருக்கு சஜின்வாஸ் குணவர்தன வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் கவனம் செலுத்த வேண்டும்

wpengine

எவன் கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine

ஶ்ரீஜயவர்தனபுர உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரத்தடை…

wpengine