உலக செய்திகள்

ஏவுகணை வளாகத்திற்கு மறைந்த அப்துல் கலாமின் நாமம்



ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், ராணுவ பயன்பாட்டிற்கான ஏவுகணைகள் வடிவமைப்பு மற்றும் அது குறித்த ஆராய்ச்சி செய்வதற்கான, ஏவுகணை வளாகம் உள்ளது.

இதில், டி.ஆர்.டி.எல்., – ஏ.எஸ்.எல்., மற்றும் ஆர்.சி.ஐ., ஆகிய ஆராய்ச்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்த ஏவுகணை வளாகத்திற்கு, நாட்டின் ஏவுகணை நாயகரும், மறைந்த முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என, டி.ஆர்.டி.ஓ. மேலும் அறிவித்துள்ளது.

(riz)

Related posts

இஸ்ரேலினால் அனுப்பப்பட்ட´Beresheet´ விண்கலம் நிலவின் பரப்பில் மோதி விபத்து..

wpengine

சவூதி உட்பட குறிப்பிட்ட சில சர்வதேச நாடுகளில் வியாழன் நோன்பு

wpengine

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய விண்கல்..!

wpengine