உள்நாட்டு செய்திகள்

தேசியப்பட்டியல் விவகாரத்தில் தன்னை குற்றம் சுமத்த வேண்டாம் – சுசில்



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப்பட்டியல் தயாரிப்பு தொடர்பில் தம்மை குற்றம் கூறுவது தவறு என முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஏலவே தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டு தோல்வியடைந்தவர்கள் நிரப்பப்பட்டுள்ளனர்.

இதற்கு தாமே பொறுப்பு என்று பலதரப்பினராலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  எனினும் நீதிமன்ற ஆணையின்படி தம்மால் அதில் தலையிடமுடியவில்லை என்று சுசில் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னைய காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் இவ்வாறான நிலை ஒன்று ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(riz)

Related posts

கல்வியியல் கல்லூரி – தகவல்களை வழங்குவதற்கான கால எல்லை நீடிப்பு

wpengine

வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புற்றோருக்கு சதொச மூலம் இலவச அத்தியாவசிய பொருட்கள்..

wpengine

மாதம்பிட்டி இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது

wpengine