விளையாட்டு

9வது முறையாகவும் தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்திய உசைன் போல்ட் (VIDEO)



சீனாவில் உள்ள பீஜிங் நகரில் 15வது உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற 100 மீற்றர் தூர ஓட்ட பந்தையத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட், பொவேல் அமெரிக்காவின் காட்லின், புரோமெல், ரோட்ஜர்ஸ், டைசன் கெய், கனடாவின் கிராசே, பிங்டியான்சு, பிரான்சின் விகவுட் ஆகிய ஒன்பது பேர் கலந்து கொண்டனர்.

இதில் உசைன் போல்ட் 9.79 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இது உலக தடகளத்தின் உசைன் போல்ட் வென்ற 9வது தங்கம் ஆகும்.

மேலும், 100 மீற்றர் ஓட்டத்தில் இது அவருக்கு 3வது தங்கப்பதக்கம் ஆகும். இதற்கு முன்னர் 2009 (பெர்லின்), 2013ல் (மாஸ்கோ) நடந்த உலக தடகளத்தின் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

இப்போட்டியில் உசைன் போல்ட்டுக்கு நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 9.80 வினாடியில் பந்தய துாரத்தை கடந்து 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.

மூன்றாவது இடத்தை 9.92 வினாடியில் கடந்த அமெரிக்காவின் புரோமல், கனடாவின் ஆன்ட்ரி டி கிராசி பகிர்ந்து கொண்டனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=KlpxLyPNCDk” width=”560″ height=”315″]

(riz)

Related posts

தேர்வுக் குழு லசித் மாலிங்க’வை போட்டிப் பட்டியலில் பெயரிட்டது…

wpengine

புத்தளம் சாஹிரா அணி தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.

wpengine

பிளாட்டினம் பிரிவில் மஹேலவுடன் இணையும் மாலிங்க..

wpengine