விளையாட்டு

டெஸ்ட் தொடருக்காக வீரர்கள் 08ம் திகதி பாகிஸ்தானுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் சிரேஷ்ட விளையாட்டு வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் இரண்டில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் 2 டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரை ஒன்றை வழங்கியிருந்தது.

அதன்படி குறித்த இரண்டு போட்டிகளுக்காகவும் வீரர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ம் திகதி பாகிஸ்தான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரை கைது செய்ய உத்தரவு

wpengine

ஐ.சி.சி. துடுப்பாட்ட தரவரிசையில் ஸ்மித் முதல் தரத்திற்கு

wpengine

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் – ஜயவர்தன அதிரடி சதம்

wpengine