உள்நாட்டு செய்திகள்

வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்று(26) இரவில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, வடக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காற்றின் வேகம் அதிகரிப்புடன் கடல் கொந்தளிக்கும் – வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்…

wpengine

நாட்டை சீர்குலைக்கும் வகையில் தவறான முடிவுகளை எடுத்தவர்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க நான் தயார் – உதய கம்மன்பில

wpengine

மீனவ சமூகத்திடம் கோரிக்கை

wpengine