உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சிப் பதவி எஸ்.பி’க்கு?



எதிர்க்கட்சித் தலைவராக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள பங்காளிக் கட்சிகளை இணைத்துக் கொண்டு, மஹிந்த ராஜபக்ஷ தனியான அணியாக- எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டால், எஸ்.பி .திசாநாயகவை எதிர்க்கட்சித் தலைவராக முன்னிறுத்த மைத்திரிபால சிறிசேன தரப்பு திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, நிமால் சிறிபால டி சில்வா அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ள இணங்கினால், சுசில் பிரேமஜெயந்தவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது குறித்த யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ள போதிலும் அந்தக் கட்சியின் ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டுள்ளனர்.

கட்சித் தலைமையின் முடிவுக்கு மாறாக நடந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், கட்சித் தலைமையின் முடிவுக்கு எதிராகச் செயற்பட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(riz)

Related posts

2016 ஆண்டுக்கான ICC டெஸ்ட் அணி பெயரிடப்பட்டுள்ளது – ரங்கன ஹேரத்திற்கும் இடம்.. (பட்டியல்)

wpengine

தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி தடைசெய்யப்படும்…

wpengine

ஹர்ஷ டி சில்வா திறைசேரி முறிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

wpengine