விளையாட்டு

The Hundred: லசித் மாலிங்க அதிரடி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள The Hundred கிரிக்கெட் போட்டிகளின் அதிக ஏலத்தில் எடுக்கப்படவிருந்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவை எந்தவொரு அணியும் விலைக்கு வாங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதிக ஏலத்தில் எடுக்கப்பட்ட (ஸ்ரேலிங் பவுன் 125000) வீரர்கள் ஆறு பேரில் க்றிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள் அணி), ககிசோ ரபாடா (தென்னாபிரிக்கா) மற்றும் லசித் மாலிங்க (இலங்கை) ஆகிய பிரபல வீரர்கள் மூவரும் நீக்கப்பட்டுள்ளமை விசேடமாகும்.

எவ்வாறாயினும் அதிக விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மிஷேல் ஸ்டோக் ஆகியோருக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

அதன்படி, குறித்த போட்டியில் இலங்கை அணி வீரர்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை.

Related posts

மூன்றாவது சுற்றில் சிமோனா ஹாலேப் வெளியேற்றம்

wpengine

திசர பெரேரா அவுஸ்திரேலியாவிலும் பந்து வீச்சில் அசத்தல்.. [VIDEO]

wpengine

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரினை ரோஹித்தின் சதத்துடன் கைப்பற்றியது…

wpengine