கேளிக்கை

ஒரே சமயத்தில் மும் மொழிகளில் நடிக்கும் த்ரிஷா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்னிந்திய திரையுலகத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் த்ரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த ‘96’ படத்திற்கு பிறகு த்ரிஷா மீண்டும் முன்னணிக்கு வந்தவர் என்பதும் யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் த்ரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் த்ரிஷா நடிக்க உள்ளார் என்கிறார்கள். ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு த்ரிஷாவுக்குக் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விமர்சனங்களுக்கு சூர்யா கொடுத்த பதிலடி

wpengine

புதிய கட்டுப்பாடுகளுடன் சமந்தாவின் சகுந்தலம்

wpengine

IPL தொடக்க விழாவில் பிரபல நடிகை எமி ஜாக்சன் நடனக் களத்தில்….

wpengine