உலக செய்திகள்

சவூதி அரேபியா – மதீனா பேரூந்து விபத்தில் 35 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவூதி அரேபியா மதீனா நகரில் இன்று(17) இடம்பெற்ற வாகன விபத்தில் யாத்திரரர்கள் சுமார் 35பேர் பலியாகியுள்ளதோடு நான்கு பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி (AFP) செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மதீனாவுக்கு வணக்க வழிபாடுகளுக்கு வந்திருந்த யாத்திரர்கள் பயணித்த பேரூந்தே பாரிய கன ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் அரேபிய மற்றும் ஆசிய யாத்திரர்களும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிறிய ரக பயணிகள் விமானம் விபத்து – குழந்தை உள்பட 6 பேர் மரணம்…

wpengine

அமெரிக்காவில் இலட்சத்தை தொடும் கொரோனா பலி

wpengine

கொரோனா தொற்றினால் நடிகர் விஜயகாந்த் காலமானார்..!

wpengine