ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வசீம் அக்ரமுக்கு எதிர்ப்பு – இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக மஹேல



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் முன்னாள் பிரபல நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்த்தனவை யாராலும் இலகுவாக மறக்க முடியாது.

இவர் அண்மைக் காலமாக மஹேல ஜயவர்த்தன பயிற்சியாளராகவும் களமிறங்கி இருந்தார். அது, ஐ.பி.எல் போட்டித் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பயிற்சியாளராக களமிறங்கி வெற்றியினையும் கைப்பற்றி இருந்தார்.

இவற்றினை மேற்கோள்காட்டி, மஹேல ஜயவர்த்தனவை இலங்கை அணியின் கிரிக்கெட் அணிக்கு பிரதான பயிற்சியாளராக நியமிக்க காய் நகர்த்தல்கள் இடம்பெற்று வருவதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இதுவரையில் மஹேல ஜயவர்த்தன எவ்வித மறுப்புக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு இருக்க, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஸீம் அக்ரம் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆக்ரோஷமான துடுப்பாட்ட வீரரான ஜூலியன் வூட் (Julian Wood)ஆகியோரது சேவையினை பெற்றுக் கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்வரும் வாரமளவில் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

சஜின் மஹிந்தர் இரகசிய சந்திப்பும் கசிந்த உண்மைகளும்..

wpengine

கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள்…

wpengine

பாரிய ஊழலை அம்பலப்படுத்திய ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட நிலை!

wpengine