Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டில் லிபரல்வாதிகள் இருக்கும் வரைக்கும் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை இருக்காது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் லிபரல்வாதிகளும், சர்வதேசத்தின் எண்ணங்களுக்கு அடிப்பணிகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களும் இருக்கின்ற வரையில், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் நிலைமை இருக்காது என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

30 வருடகால யுத்தத்தை நிறைவு செய்து, நாட்டில் சோதனைகள் அற்று, அடையாள அட்டையை காண்பிக்காமல் கூட்டங்களில் பங்கேற்கக்கூடிய நிலைமை 2009ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது துரதிஸ்ட வசமாக அந்த நிலைமை இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது.

தாம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சோதனைகள் அற்ற பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

Related posts

தேசிய ரீதியாக சாதிக்க காரணமாக இருந்த கல்முனை வலய 500 ஆசிரியர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பு !

Azeem Kilabdeen

2019 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிப்பு…

wpengine

இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு

wpengine