ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சஜித்திற்கு வாய்ப்பு கை நழுவும் அபாயம்.. தோல்விக்கு துணை போக முடியாது – முஸ்லிம் காங்கிரஸ் அதிரடி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியானது, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் மோசமான தோல்வியினை தழுவியமை காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுள் உட்பூசல்கள் இடம்பெற்று வருவதாக கட்சியின் உள்ளக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் அநேக உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரவு வழங்கும் சஜித் பிரேமதாச தொடர்பில் மீளவும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என கோரி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தோல்வியில் வீழ்ந்த ஒரு கட்சிக்கு ஆதரவு வழங்கி பின்னர் மீளவும் ஜனாதிபதித் தேர்தலிலும் தோல்வியினை தழுவினால் தமது கட்சியுடன் இணைந்துள்ள முஸ்லிம் மக்கள் கட்சியினை விட்டு பிரிந்து செல்லும் நிலைப்பாடு உள்ளதாக தாம் அஞ்சுவதாகவும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

கோட்டாபய ராஜபக்ஷ உடன் புதிய முஸ்லிம் தலைமைகள் இணைய முன்னர் தமது கட்சி தீர்க்கமான அரசியல் தீர்மானம் ஒன்றினை எட்ட வேண்டும் எனவும் கட்சி சார்பிலான உறுப்பினர்கள் கூறி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

அவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க விருப்பம் இல்லை எனின், யாருக்கும் ஆதரவு வழங்காது அதன் பின்னர் ஒரு அரசியல் தீர்வினை எட்டுவது சிறந்தது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதன்படி, இவ்வாரம் குறித்த கட்சியின் தலைமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை சந்தித்து இறுதித் தீர்மானம் ஒன்றினை எட்டவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சவப்பெட்டியில் இருந்து எழுந்து பேசிய பிணம் – பரபரப்பு சம்பவம்

wpengine

நல்லவேள அஜித் “பில்லா” படம் முன்னாடியே ரிலீஸ் ஆகிடுச்சு!

wpengine

உலகக் கிண்ண ஒத்திவைப்பும் மாலிங்கவின் ஓய்வும்

wpengine