உள்நாட்டு செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணத்திலும் காலி, மாத்தறை, அநுராதபுரம், வவுனியா மாவட்டங்களிலும் இன்றிரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் காற்றின் வேகமானது மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

wpengine

அமைச்சர் ரிஷாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை அடிப்படையற்றது – முசலி பிரதேச சபை ஏகமனதான கண்டனத் தீர்மானம்

wpengine

மருந்தகங்கள் குறித்து முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்..

wpengine