ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாவனெல்லயில் முட்டை ரொட்டியால் வன்முறை; பொலிஸார் உட்பட இருவர் வைத்தியசாலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாவனெல்ல பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் முட்டை ரொட்டியினால் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியுள்ளது.

இதனால் கணவன் மனைவியை தாக்கியதாக கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க சென்ற பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர், பொலிஸ் அதிகாரிகளினால் தனக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறி அவரும் வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஒரு முட்டை ரொட்டி கொண்டு வந்து தனியாக சாப்பிட்டுள்ளார்.

பின்னர் பிள்ளைகளும் தங்களுக்கு முட்டை ரொட்டி வேண்டும் என கோரவும் மனைவி கடைக்கு சென்று முட்டை ரொட்டி வாங்கி வந்துள்ளார்.

இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

Related posts

மொடல் உள்ளாடை

wpengine

எந்த சமயத்தை சேர்ந்தவர்களாயின் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும்

wpengine

73 பொலிசாருக்கு இடமாற்றம் மற்றும் நியமனம்

wpengine