ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉலக செய்திகள்

பிச்சை எடுத்து கோடிஸ்வரியான ஹஜ் வாபா (இலங்கை மதிப்பில் ரூ.16 கோடி)



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹஜ் வாபா முகமது அவத் என்ற பெண் லெபனான் நாட்டில் சீதோன் நகரில் தனியார் மருத்துவமனையின் வசலில் தினமும் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

இவர் தான் பிச்சை எடுக்கும் பணத்தை ஜே.டி.பி. வங்கியில் தினமும் வைப்பிலிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் ஜே.டி.பி. வங்கியின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததையடுத்து, அந்த வங்கி சமீபத்தில் மூடப்பட்டது.

தடையை தொடர்ந்து வங்கியில் வைப்பு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் பணத்துக்கு அந்நாட்டு ரிசர்வ் வங்கி பொறுப்பு எடுத்துக்கொண்டது.

பின்னர், ஹஜ் வாபா முகமது அவத்துக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து 3.3 பில்லியன் லெபனான் பவுண்டுக்கான 2 காசோலைகள் (இலங்கை மதிப்பில் ரூ.16 கோடி) வழங்கப்பட்டன.

இதையடுத்து ஹஜ் வாபா முகமது அவத் கோடீசுவரி என்பது தெரிந்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

இந்த செய்தி தற்போது சர்வதேச ரீதியாக பிரபலமாக பேசப்படும் செய்தியாகியுள்ளது.

Related posts

பங்களாதேஷ் அகதிகள் முகாமில் பாரிய தீப்பரவல்

wpengine

தலைவர் இன்றி தவிக்கும் இலங்கை அணி

wpengine

அகில தனஞ்சய ஆசியக் கிண்ண ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகல்…

wpengine