உள்நாட்டு செய்திகள்

வித்தியா பாலியல் படுகொலை, சுப்பிரமணியம் கொலை குற்றவாளிகள் 02வருக்கு தூக்குத் தண்டனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்பாணம் – பூங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட பூ.ஜெயக்குமாா் உள்ளிட்ட இருவருக்கு இன்று(30) தூக்கு தண்டணை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கா் தீா்ப்பு வழங்கியுள்ளாா்.

பூங்குடுதீவு பகுதியில் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காகவே இருவருக்கும் இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது.

அத்துடன் எதிரிகள் இருவரும் இணைந்து சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரின் உடமையில் இருந்து 10,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டமைக்காக 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்த மேல் நீதிமன்றம், இருவரும் 10,000 ரூபா தண்டப் பணம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

அதனைச் செலுத்தத் தவறின் 10 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிட்டது.

Related posts

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரட்டைக் கொலை.. – விசாரணைகள் ஆரம்பம்..

wpengine

மாலபே தனியார் கல்லூரி மாணவர்களுக்கு நட்டஈடு வழங்க GMOA யோசனை

wpengine

ஜனாதிபதி தேர்தல் – 2014 முறைப்பாடுகள் பதிவு

wpengine