ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த தலைவராக இருப்பதற்கு யார்? காரணம்; ஜனாதிபதியின் கருத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், சமகாலத்தில் மஹிந்த ராஜபக்‌ஸ இன்று எதிர்கட்சி தலைவராக இருப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தான் காரணம். கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், சபாநாயகருக்கு எழுத்து மூலம் விடுத்தை கோரிக்கைக்கு அமைவாகவே அவர் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கினேன். ஆனால் 113 ஆசனங்களை பெற்றெடுக்க அவர்களுக்கு முடியவில்லை. அது என் குற்றமல்ல.

இப்போது போதைவஸ்துகாரர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிரதமர் ரணிலும், மஹிந்த ராஜபக்‌ஸவும் ஒன்றிணைந்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

Related posts

நாமல் மன்னிப்புக் கோரினார் – சம்பிக்க..

wpengine

கண்ணில் ‘டாட்டூ’ போட்ட மாடல் அழகிக்கு ஏற்பட்ட விபரீதம்

wpengine

உயிர் குடிக்கும் ‘கவனயீனம்’

wpengine