விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டி இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று (27) இடம்பெறவிருந்த முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று கராச்சியில் பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த இரு அணிகளுக்குமான 2வது போட்டி கராச்சியில் நாளை மறுதினம் நடைபெறவிருந்த நிலையில், அது 30 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது.

Related posts

இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களுடன் சுருண்டது…

wpengine

இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு- 20 போட்டியில் அவுஸ்திரேலிய வெற்றி

wpengine

தரவரிசையில் அஸ்வின் 2வது இடம், பின்தள்ளப்பட்டார் டிவில்லியர்ஸ்

wpengine