ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சஜித்தை களமிறக்க ரணில் கொள்கையளவில் இணக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க ரணில் கொள்கையளவில் இணங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நாளைய தினம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சஜித்தை சில நிபந்தனைகளை ரணில் முன்வைத்துள்ளார்.சஜித்தை கட்சியின் வேட்பாளராக நிறுத்துவதெனில் மத்தியகுழு சம்மதிக்க வேண்டும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க சஜித் ஒப்புக் கொள்ள வேண்டும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் அனைத்து கட்சிகளும் சஜித்தின் நியமனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளே முன்வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறான நிபந்தனைகள் சாத்தியமாகுமா என்ற கேள்வி தற்போது அரசியல் விற்பனர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related posts

சஜித் பிரேமதாச தம்பதியினர்வீடு திரும்பினர் [PHOTOS]

wpengine

மனைவி சொல்வதற்கு எல்லாம் ஆம் ஆம் கோசம் தான் – சங்கா மற்றும் முரளி

wpengine

குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16வயது மாணவி உடல் கருகிப் பலி!

wpengine