ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சஹ்ரானின் மடிக்கணணி தற்போது யாரிடம் உள்ளது?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமது சஹ்ரான் ஹாஷிமின் மடிக்கணினி, அமெரிக்க புலனாய்வு பிரிவான FBIயின் உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், இந்த மடிக்கணினி இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலேயே உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அம்பாறை பகுதியிலிருந்து சஹ்ரான் பயன்படுத்திய மடிக்கணின் கண்டெடுக்கப்பட்டிருந்ததுடன், அந்த மடிக்கணினியிலிருந்து விசாரணைகளுக்கு தேவையான முக்கிய சாட்சியங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Related posts

IPL நெருங்க நெருங்க மாலிங்கவின் உபாதை குணமாகின்றமை குறித்த facebook ஆக்கங்கள்..

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பெண்களை ஆபாசமாக ஒளிப்பதிவு.. (VIDEO)

wpengine

அவிஷ்கவின் தந்தைக்கு போட்டியின் இடையே திடீர் சுகயீனம்

wpengine