உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் உத்தரவை மீறி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைசச்ர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு திரட்டும் மற்றுமொரு மாபெரும் பொதுக்கூட்டம் குருணாகலில் நடைபெற்றுள்ளது.

குருணாகல் சத்யவாதி மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் இடம்பெற்றது. சஜித் பிரேமதாசவின் ஆதரவளார்கள் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான அஜித் பி.பேரெரா, ஹரின் பெர்னாண்டோ, சுஜித சேன சிங்க உள்ளிட்ட கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, பிரதமர் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டாம் என உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இழுபறிகள் உள்ள நிலையில் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

Related posts

மாலைத்தீவு – இலங்கை ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு…

wpengine

மஹிந்தானந்தவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை

wpengine

வஸீம் கொலையாளிகளுக்கு அரச உயர்மட்ட அனுசரணை?

wpengine