ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

கட்சியைத் துண்டாட நினைப்பவர்கள் முகவரியற்றுப் போவார்கள் – பிரதமர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐ.தே.கவுக்கு உள்ளும் வெளியிலும் கட்சியைத் துண்டாட நினைப்பவர்கள் முகவரியற்றுப் போவார்கள் என்பது உறுதி என சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் சொல்லி வைக்க விரும்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாலைதீவு புறப்பட முன் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருடன் ஜனாதிபதித் தேர்தல், வேட்பாளர் விவகாரம் உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களும் எப்போது நடைபெறும் என்று இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது.எனினும், இந்த மூன்று தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி வெல்வது உறுதி. ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் எமது கட்சிக்குள் எவரும் முரண்படக் கூடாது.எனவும் பிரதமர் கூறியுள்ளதாக குறித்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

wpengine

இந்து-இலங்கை ஒன்றிணைந்த கடற்படை பயிற்சிகள் ஆரம்பம்…

wpengine

ராஜிதவுக்கு கொவிட்

wpengine