ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

427 சிறுவர்கள் கடவுளுக்கு நரபலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நரபலி கொடுக்கப்பட்ட சிறுவர்களின் உடல் எச்சங்களை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

05 முதல் 14 வயதுக்குட்பட்ட 227 சிறுவர்களின் உடல் எச்சங்களே இவ்வாறு பெருவின் தலைநகர் லிமாவுக்கு வடக்கே உள்ள கடலோர நகரமான ஹுவான்சாகோவிற்கு அருகே கண்டெடுத்துள்ளனர்.

இந்த குழந்தைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சென்ற ஆண்டு இதே நாட்டின் இருவேறு பகுதிகளில் 200 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிறுவர்களின் பிணக்குவியலில் சிலரது முடி மற்றும் தோல் புதைக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக வெளிநாட்டு செய்திச் சேவைக்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் குளிர்கால வானிலையின் போது கொல்லப்பட்டு, கடற்கரையை அண்டிய பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதால், கடவுள்களை திருப்திப்படுத்த அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

Related posts

அமைச்சர் விஜேதாச ஐ.தே.கட்சியில் இருந்து ஸ்ரீ.சு.கட்சிக்கு..

wpengine

பசில் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு எதிராக முறுகல் வலுப்பெறும் சாயல்..

wpengine

45 கோடி ரூபாவில் காணி கொள்வனவு! பிரபல அரசியல்வாதியின் சகோதரர் யார்?

wpengine