உலக செய்திகள்

மீண்டும் கடும் மழை எச்சரிக்கை



(FASTNEWS|COLOMBO) – கேரளாவில் இன்று(21) முதல் மீண்டும் கடும் மழை பெய்யக் கூடும் என கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதை தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு, இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்யுமென்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கடந்த 2 வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அந்த மாநிலம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

இதுவரை கேரளாவில் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. 1791 வீடுகள் மழையால் முழுமையாக இடிந்து விட்டது. 14559 வீடுகள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.

Related posts

அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ்

wpengine

இத்தாலியில் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு

wpengine

MORA சூறாவளியினால் பங்களாதேஷில் சுமார் 10 இலட்சம் மக்கள் பாதிப்பு..

wpengine