உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் 136 சாரதிகள் கைது



(FASTNEWS|COLOMBO ) – நேற்று(08) காலை 06 மணி முதல் இன்று(09) காலை 06 மணி வரை 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 136 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூலை 5 ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி இதுவரை 7802 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பால்மா வகைகளின் விலைகளை மேலும் குறைக்க நிறுவனங்கள் இணக்கம்

News Editor

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்!

News Editor

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் விக்கியுடன் சந்திப்பு…

wpengine