உலக செய்திகள்

ரஷ்யாவில் காட்டுத்தீ – அவசரநிலை பிரகடனம்



(FASTNEWS|COLOMBO) – ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக பல்லாயிரக்கனக்கான ஏக்கர் நிலப்பரப்புகளில் உள்ள மரங்கள் தீக்கிரையாகியுள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து பரவி வரும் இந்த தீ காரணமாக 6.7 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.

அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்றால் இந்த காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

காட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் 20 விமானங்கள் மூலம் தண்ணீரை கொட்டி தீயை கட்டுப்படுத்த ரஷ்ய பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

Related posts

துபாய் நோக்கி 130 பயணிகளுடன் பயணித்த இந்திய விமானம் விபத்து…

wpengine

ஜப்பானில் சற்றுமுன்னர் பாரிய நிலநடுக்கம்…

wpengine

கசினோ கோடீஸ்வரர் ஜேம்ஸ் பெக்கரின் இலங்கை விஜயம் குறித்து சந்தேகம்

wpengine