உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை



(FASTNEWS|COLOMBO) – மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

டக்வத் லூயிஸ் முறைக்கமைய இலங்கை அணிக்கு வெற்றி…

wpengine

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

மர்மப்பொருளால் கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகடனம்

wpengine