உலக செய்திகள்

23 அங்கீகாரமற்ற போலி பல்கலைக்கழகங்கள் – பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு



(FASTNEWS|COLOMBO) – இந்தியாவில் 23 அங்கீகாரமற்ற போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக அந்நாட்டு பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) செயலாளர் ரஜினிஷ் ஜெயின் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“..நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறி அங்கீகாரமற்ற பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன. இப்போதைக்கு நாட்டில் 23 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இல்லாமல் பெயரளவுக்கு சுயமாக வடிவமைத்துக் கொண்டு போலியாக செயல்படுகின்றன. மாணவர்கள் இந்த பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்..” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்…

wpengine

கொவிட்-19 : சிங்கப்பூரில் 77 பேர் அடையாளம்

wpengine

அயர்லாந்து பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு

wpengine