உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் 11 பேருக்கு உடனடி இடமாற்றம்



(FASTNEWS| COLOMBO) – பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பிரஜைகள் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 11 பேருக்கு உடனடி இடமாற்றம் வழங்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.

பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த டி.56 ரக துப்பாக்கிகள் 2 காணாமல் போன சம்பவம் தொடர்பில், பாணந்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரால், பொலிஸ் பிரஜைகள் நிலைய பொறுப்பதிகாரி , உப பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 9 பேர் உள்ளிட்டவர்களுக்கு இந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், முன்னதாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரபாத் பரணவிதாரணவும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆஸி வீரர் கிளார்க்கிடமிருந்து பாகிஸ்தான் அணிக்கு புகழாரம்.

wpengine

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 4வது நாளாகவும் தொடர்கிறது…

wpengine

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை…

wpengine