உள்நாட்டு செய்திகள்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பவாஸ் பிணையில் விடுதலை



(FASTNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் என சந்தேகத்தின் பேரில் கைதான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் மீது இதுவரையில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்குவதில் எவ்வித எதிர்ப்பும் இல்வை என சட்டமா அதிபர் வழங்கிய கடிதத்தின் அடிப்படையில் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த சந்தேகநபருக்கு 5 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் குறித்த நபரை விடுதலை செய்யவும் அவருக்கு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கு 24 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

wpengine

தமிழக மீனவர்கள் கைதானது குறித்து ஜெயலலிதாவிடமிருந்து இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம்

wpengine

கொழும்பில் 24 மணிநேர நீர் விநியோகம் தடை

wpengine