உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 -100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி



(FASTNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலிமற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 -100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

wpengine

வில்பத்து காடழிப்பு குறித்து அரசுக்கு தவறான குற்றச்சாட்டு – ஜனாதிபதி

wpengine

ஐக்கிய தேசிய கட்சியால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை…

wpengine