உள்நாட்டு செய்திகள்

நாட்டின் 17 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு



(FASTNEWS|COLOMBO)- நாட்டின் 17 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் 21 ஆயிரத்து 26 குடும்பங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்து 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, மோனராகலை, அனுராதபுரம், வவுனியா, மாத்தளை, குருநாகல் மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களிலும் வறட்சியின் பாதிப்பு நிலவுகிறது.

இதேவேளை கடும் வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 396 சிறிய நீர்பாசனக்குளங்கள் முழுமையாக வற்றியுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.ஜெகந்நாதன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்கும் சிறிய நீர்பர்சனக்குளங்கள் அனைத்துமே முற்றாக வற்றியுள்ளமையினால் விவசாயிகள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்று(30) காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது…

wpengine

தனஞ்சய சில்வாவின் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக 6ம் திகதி..

wpengine

மேலும் 10 பேர் பூரண குணம்

wpengine