உள்நாட்டு செய்திகள்

பூஜித் மற்றும் ஹேமசிறி மீதான மனுக்கள் விசாரணைக்கு நீதியரசர்கள் எழுவர் அடங்கிய குழு நியமனம்



(FASTNEWS|COLOMBO) – பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்ய ஏழு பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிகார, சிசிற டீ ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டீ.பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னான்டோ உள்ளிட்டோர் இந்த நீதியரசர் குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த நீதிபதிகள் குழு முன்னிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாலிங்கவிடமிருந்து மதீஷவிற்கு பாடம்..!

wpengine

இறுதி இருபதுக்கு இருபது போட்டிக்கான இலங்கை மற்றும் ஆஸி அணி விவரம்..

wpengine

விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன்

wpengine