உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்



(FASTNEWS|COLOMBO) – நேற்று(07) கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொய்ஸ் பெர்ணான்டோவை ஜூலை மாதம் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, நபர் ஒருவரை தாக்கிவிட்டு கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை நேற்று கடான பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கடான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வட மத்திய மாகாண சபை உறுப்பினராக சமந்த நியமனம்..

wpengine

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கப்பட்ட இரண்டு புதிய நியமனங்கள்!

wpengine

நாட்டின் அரிசித் தேவையில் 75 வீதத்தை கிழக்கிலிருந்து வழங்க முடியும்..!

wpengine