உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட வைகோ’வுக்கு சிறைத் தண்டனை



(FASTNEWS | COLOMBO) – தமிழக அரசு தொடர்ந்த தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று(05) தீர்ப்பு வழங்கி உள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி வைகோவுக்கு 10,000 ரூபா அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலஞ்சம் வழங்க முற்பட்ட நபரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

அரசுக்கு வரி அறவிடுவதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை – மஹிந்த…

wpengine

உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் சுவிஸர்லாந்து விஜயம்

wpengine