உள்நாட்டு செய்திகள்

இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளது வங்கிகள் மீது, சைலன்ஸ் சைபர் தாக்குதல்



(FASTNEWS | COLOMBO) – இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் சிலவற்றின் வங்கிகள் மீது, சைலன்ஸ் என்ற இணையவழி தாக்குதல் குழு, சைபர் தாக்குதல் நடத்திருப்பதாக சீ.டி.நெட் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கை, பங்களாதேஸ், இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் வங்கிகள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அதில் பங்களாதேஷில் வங்கி ஒன்றில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் 3மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்ற அதேவேளை, இலங்கையில் ஏதேனும் வங்கிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எவையும் இதுவரையில் வெளியாக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு முதல் செயற்படும் குறித்த குழுவானது, கடந்த ஆண்டு ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் வங்கிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தலைமன்னாரில் கைப்பற்றப்பட்ட நான்கு கோடி ரூபா மதிப்பிலான தங்கம்

wpengine

அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்

wpengine

ஐஸ் போதைப்பொருள் உட்கொள்பவர்களின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள்..!

wpengine