உலக செய்திகள்

சிந்து நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சிந்து நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 80 பேர் பயணித்த அந்த படகு, தர்பெலா பகுதியில் சென்றபோது பாரம் தாங்காமல் ஆற்றில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதால் விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

ரஷ்யா கொரோனா தடுப்பூசி இலவசமாக

wpengine

அமெரிக்காவில் ‘கிரீன் கார்ட்’ ஒதுக்கீடு 45% உயர்வு…

wpengine

எதிர்ப்புகளுக்கும் மத்தியில் 5வது முறையாக அணுகுண்டு பரிசோதனை செய்தது வடகொரியா.

wpengine