உள்நாட்டு செய்திகள்

29.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது



(FASTNEWS|COLOMBO) – மன்னார், பேசாலை பகுதியில் நேற்று(02) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மறைக்கப்பட்டிருந்த 29.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து மேற்கொன்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கேரள கஞ்சா, 8 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் மற்றும் கேரளா கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு

wpengine

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசேட விசாரணைகள்

wpengine

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen