உலக செய்திகள்

இராணுவ ஆட்சிக்கு எதிராக சூடான் வீதிகளில் பலத்த போராட்டம் – 7 பேர் பலி



(FASTNEWS | COLOMBO) – சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் நடத்திய போராட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூடான் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரசு செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி போராட்டத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 181 பேர் காயமடைந்துள்ளனர்.
போராட்டக்காரர்களில் குறைந்தது 5 பேர் இறந்துள்ளதாக சூடான் அரசுக்கு எதிர்தரப்பினர் சார்பான மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.

சூடானை 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஒமர் அல்-பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

ஜனநாயக முறையில் புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்பதற்கு இடைப்பட்ட காலம் மூன்று ஆண்டுகள் என இராணுவம் அறிவித்தது. ஆனால் மக்களாட்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்தன.

கடந்த 1989-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதியன்று சூடானில் நடந்த ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு நாட்டின் அதிபராக ஒமர் அல் பஷீர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பானில் கடும் வெப்பம் காரணமாக 65 பேர் உயிரிழப்பு…

wpengine

டெல்லி போராட்ட வன்முறை – 38 பேர் பலி

wpengine

அமெரிக்காவை சூறையாடிய சூறாவளி – 19 பேர் உயிரிழப்பு

wpengine