விளையாட்டு

உலக கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் அதிரடி வீரர் அன்ரூ ரஸல்



(FASTNEWS|COLOMBO)- காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அன்ரூ ரஸல் உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன் ரஸலுக்கு முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில் அவர் உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சுனில் அம்ப்ரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

31 வயதான அன்ரூ ரசல் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்காமல் போனாலும், பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் – 19 : சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஒத்திவைப்பு

wpengine

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி

wpengine

தோல்விக்கு நான் தான் காரணமெனின் கெப்டன் பதவியிலிருந்து விலகத் தயார்

wpengine