உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில் பணிப்புறக்கணிப்பு – இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது



(UTV|COLOMBO)- ரயில் தொழிற்சங்கங்கள் சில இணைந்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(22) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்திலும் பணிப்புறக்கணிப்பு  போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் திட்டமிட்டபடி இன்று(22) நள்ளிரவு வரை நடைமுறைப்படுத்தப்படும் என ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

இன்றும் நாட்டின் சில பிரதேசங்களில் காற்றுடன் கூடிய மழை

wpengine

23 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் – 3 பிரதான நிறுவனங்கள் தள்ளாட்டம்..!

wpengine

தேசிய கல்வியற் கல்லூரி – 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்

wpengine