உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த எதிர்நோக்கியுள்ள சவால்களும் பிரதமரின் வெற்றியும் – சர்வதேச ஊடகங்கள்



எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய நிலை தொடர்பில் சர்வதேச இணையதளங்கள் பல கவனம் செலுத்தியுள்ளன.

விஷேட கடிதம் ஒன்றை வெளியிட்ட சர்வதேச ஊடகம், கொலை மற்றும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் தேர்தல் போராட்டத்தில் வந்துள்ளார் அதில் குறிபிடப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் முன்னாள் ஜனாதிபதியை கடுமையான நெருக்கடிக்கு தள்ளிச்செல்லும் எனவும், அவர் தாஜுடீனின் கொலை தொடர்பில் கருத்த வெளியிடுவதன் மூலம் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமைக்கமைவாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை விட 10 மடங்கு முன்னிலையில் இருப்பதாகவும் குறித்த இணையதளங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிடுகையில், முன்னாள் ஜனாதிபதி 100க்கு 27 சதவீதம் மாத்திரமே மக்கள் பாராட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க 100க்கு 40 சதவீதம் மக்கள் பாராட்டை பெற்று முன்னிலையில் இருப்பதாகவும் குறித்த செய்திப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமராவதற்கு பல தடைகள் காணப்படுவதாக மற்றுமொரு இந்திய இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ராஜபக்ஷவின் மகன்மார்களின் நடவடிக்கைகளினால் மஹிந்த ராஜபக்ஷ மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய இணையதளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. தாஜுடீனின் கொலை சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம் எனவும் அவ் அவுஸ்த்திரேலிய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

(riz)

 

Related posts

தபால் தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்தும் நீடிப்பு..

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

wpengine