விளையாட்டு

ஆஸி அணிக்கு சவாலாக பங்களாதேஷ் அணி இன்று களமிறங்குகிறது



(FASTNEWS | COLOMBO) – உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (20) நடக்கும் 26-வது போட்டியில் 05 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, பங்களாதேஷ் அணியினை எதிர்கொள்ளவுள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் வலுமிக்கதாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை நீட்டிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

பங்களாதேஷ் அணி 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளி பெற்றுள்ளது. இதில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்து வியப்பூட்டிய வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கும் சவாலை ஏற்படுத்தும் என நம்பிக்கையுடன் வியூகங்களை வகுத்துள்ளதாக நம்பப்படுகிறது.

Related posts

உலகக்கிண்ண இரு­ப­துக்கு 20 தொட­ருக்­கான சிம்­பாப்வே அணி அறிவிப்பு.

wpengine

லசித் மாலிங்கவுக்கு ஓராண்டுத் தடையும், அபராதமும் விதிப்பு..

wpengine

மதிய போசன இடைவேளை – விஷ்வ’வின் பந்துவீச்சில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் தடுமாற்றம்…

wpengine