உள்நாட்டு செய்திகள்

ஜெப்ரி அலோசியஸ் வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியை இரத்து செய்யுமாறு சட்டமா அதிபர் கோரிக்கை



(FASTNEWS | COLOMBO) – சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள பேர்பசுவல் ட்சரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் நாளை(20) விளக்கமளிக்குமாறு இரு தரப்பினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள பேர்பசுவல் ட்சரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் எதிர்வரும் 01ம் திகதி முதல் 11ம் திகதி வரையான காலத்தில் மகளின் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் குறித்த மனு மூலம் கூறியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பம் தொடர்பில் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதால் பேர்பசுவல் ட்சரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதியை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பதவி இராஜினாமா..

wpengine

ஊடகவியலாளர் லசந்த கொலையின் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

லசந்த கொலை– சந்தேகநபரான இவரை அடையாளம் தெரிந்தால் அழைக்குமாறு பொலிசார் கோரிக்கை.

wpengine