கேளிக்கை

நினைத்தபடி இன்னும் வெற்றி பெறவில்லை – ராதிகா



(FASTGOSSIP|COLOMBO)- கபாலி, தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற தமிழ் படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. பிரிட்டிஷ், அமெரிக்க படமாக உருவான, தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நடித்ததுடன் வேர்ல்டு வார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் தான் நினைத்தபடி இன்னும் வெற்றி பெறவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: ’நான் நடித்திருக்கும் தி வெட்டிங் கெஸ்ட் படம் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியானது.

புதிய படத்தில் நடிப்பது பற்றி விரைவில் முடிவு செய்வேன். எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். என்னை பொறுத்தவரை மற்றவர்கள் வெற்றி என்று எதை நினைக்கிறார்களோ அதில் இருந்து நான் நினைக்கும் வெற்றி மாறுபட்டதாக உள்ளது.

என் மனதுக்குள் என்ன நினைத்திருக்கிறேனோ அந்த சாதனையை இன்னும் செய்ய வில்லை. அதற்கான நேரம் வரும்போதுதான் நான் வெற்றி பெற்றதாக உணர்வேன்’. இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

Related posts

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து முகமூடியாக நடிகர் விஜய் மெரினாவில்… [PHOTOS]

wpengine

நஷ்டத்தில் ஓடும் சமந்தாவின் படம்

wpengine

உலகமே அறிந்த நீலப் பட நடிகை மியா கலீபாவுக்கும் சமையல் காரருக்கும் திருமணம்…

wpengine