உலக செய்திகள்

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே கார் குண்டுவெடிப்பு



(FASTNEWS|COLOMBO)- சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சோமாலியாவில் அல்-கொய்தாவின் ஆதரவுபெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இவர்கள் அங்கு பொலிசார் பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

குண்டுவெடிப்பில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன், மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்துக்குள்ளாக மொகாதீசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு..

wpengine

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(12)…

wpengine

ஊழல் மோசடி வழக்கில் சம்சுங் நிறுவன தலைவரின் மகன் மீதும் குற்றச்சாட்டு…

wpengine