உலக செய்திகள்

உக்ரைனில் மனநல மருத்துவமனையில் தீ விபத்து



(FASTNEWS|COLOMBO) – உக்ரைனில் மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2-ம் உலகப்போர் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்று மனரீதியில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், மருத்துவமனையில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் காயங்கள் இன்றி மீட்கப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை என்பதுடன் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

ரஷ்ய படையினரின் வான்வெளி தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு…

wpengine

ஹிட்லரின் டெலிபோன் அமெரிக்காவில் ஏலம்…

wpengine

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் இராஜினாமா…

wpengine