உலக செய்திகள்

உகண்டாவைத் தாக்கிய இபோலா



(FASTNEWS|COLOMBO) – கொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவிலும் இபோலா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

5 வயதுச் சிறுவன் ஒருவன் இபோலா வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டிருப்பது, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கண்டறியப்பட்டுள்ளது.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த 10 மாதங்களில் 2000க்கும் அதிகமானோர் இபோலா தாக்கத்திற்குள்ளானதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, இபோலா தாக்கத்திற்குள்ளாகிய சிறுவன் உகண்டா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

பேரூந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

wpengine

எகிப்து ஜனாதிபதி மோர்சிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து.

wpengine

இயல்பு நிலைக்கு திரும்பும் வியட்நாம்

wpengine